வியாழக்கிழமை 27 ஜூன் 2019

தமிழகத்தில் மேற்கு, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அய்வு மையம்

DIN | Published: 10th June 2019 06:11 PM


சென்னை: தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை அய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, இதுவரை வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது நாளை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில்  அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதே சமயம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், புதுவை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சுகாதார தரவரிசைப் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது: நிதி ஆயோக் மீது அமைச்சா் சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கியதால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை குறைவு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு 
வடதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு