வியாழக்கிழமை 27 ஜூன் 2019

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3 முதல் வழங்கப்படும்

DIN | Published: 01st June 2019 02:46 AM


 பிளஸ் 2 பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள்,  தனித் தேர்வு மையங்களில் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பிளஸ் 1,  பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல்,  மறுமதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும்,  தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும்  ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம். 
 பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்,  பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்)  மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். 
பிளஸ் 1 பொதுத் தேர்விலோ அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு,  அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.  இந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்கண்ட இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சுகாதார தரவரிசைப் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது: நிதி ஆயோக் மீது அமைச்சா் சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கியதால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை குறைவு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு 
வடதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு