தமிழ்நாடு

காலி பால் பாக்கெட்டுகளை திரும்பக் கொடுத்தால் காசு:  ஆவின் நிறுவனம் அறிவிப்பு 

31st Jul 2019 07:08 PM

ADVERTISEMENT

 

சென்னை: பயன்படுத்திய காலி பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் என்று ஆவின் நிறுனம் அறிவித்துள்ளது.

பதினான்கு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று  2019-ம் ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசால் அரசாணை வெளியிடபட்டது. இதில் மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் வகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசு விநியோகம் செய்யும் ஆவின் பால் பாக்கெட்கள் மறுசுழற்சிக்கு  உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பயன்படுத்திய காலி பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் என்று ஆவின் நிறுனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இனி பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம். காலி பாக்கெட்டுகளை அவர்கள் சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பாக்கெட் ஒன்றுக்கு ரூ.10 பைசா என்ற வீதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT