தமிழ்நாடு

12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

31st Jul 2019 04:26 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, சேலம், தருமபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 31) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
பருவமழை: தென்மேற்குப் பருவமழை தற்போது வட, உள் கர்நாடகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிரமடைந்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT