தமிழ்நாடு

மோட்டார் வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை உயர்த்தக் கூடாது

31st Jul 2019 01:36 AM

ADVERTISEMENT

மோட்டார் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது ஏற்கத்தக்கது அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்தப் போவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நடவடிக்கையால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு, பதிவுக் கட்டணத்தை  ஒரே நேரத்தில் அதிகமாக உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT