தமிழ்நாடு

கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு

31st Jul 2019 12:44 AM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் பொருள்களுக்கும்,  அவ்வாறு தயாரிக்கப்படும் பொருள்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கும் புவிசார் குறியீடு சான்று வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி மத்திய அரசிடம் கடந்த 2018-இல் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதன் மூலம் புவிசார் குறியீடு எண்ணிக்கையில் கர்நாடகம், மகாராஷ்டிரத்தை அடுத்து 3-ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. இதேபோல்,  இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கு ஒடிஸா மாநிலம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் இந்தச் சான்றை வழங்கியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT