தமிழ்நாடு

மாத ஊக்கத் தொகை கோரி கிராம கோயில் பூஜாரிகள் ஆர்ப்பாட்டம்

30th Jul 2019 01:42 AM

ADVERTISEMENT


மாத ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு கூறுவோர் பேரவை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். 
குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர் எஸ். கருணாகரன் வரவேற்றார். நாகை மாவட்ட இணை அமைப்பாளர் சி. செளந்தர் ராஜன் விளக்கவுரை ஆற்றினார்.
 நல்லாசிரியர் செல்வராஜ், மண்டல அமைப்பாளர் ஏ. பாவேந்தன்ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  
பூஜாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், ஓய்வூதியத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT