கன்னியாகுமரி அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயதாசன் (58). மீனவரான இவர் தனது 8 வயது பேத்தியை கீழமணக்குடி பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இருதயதாசனை கைது செய்தனர். இவ்வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், இருதயதாசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்திய தண்டனை சட்டம் 5 (எம்) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், சட்டம் 5 (என்) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.