தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைவு

30th Jul 2019 12:54 AM

ADVERTISEMENT


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.26,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 குறைந்து ரூ.3,324-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 11 பைசா குறைந்து, ரூ.44.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.110 குறைந்து, 44,500 ஆகவும் இருந்தது. 
திங்கள்கிழமை விலை  ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,324
1 பவுன் தங்கம்       26,592
1 கிராம் வெள்ளி    44.50
1 கிலோ வெள்ளி     44,500
சனிக்கிழமை விலை  ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்       3,331
1 பவுன் தங்கம்    26,648
1 கிராம் வெள்ளி    44.61
1 கிலோ வெள்ளி    44,610

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT