தமிழ்நாடு

சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

30th Jul 2019 01:31 AM

ADVERTISEMENT


பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என,   தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட  அறிக்கை:
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை 
ஏற்பட்டுள்ளது. போரூர் - குன்றத்தூர் சாலை  மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பல்வேறு விபத்துகள் அந்தச் சாலையில் நடந்து வருகின்றன. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுபோல, சென்னை சாலிகிராமம்  உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து கிடக்கின்றன.  கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அவை சீரமைக்கப்படாமல் உள்ளன.  எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை சீரமைப்பு பணிகளில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி, பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT