மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பத்தாம் வகுப்பு பள்ளி மாணவனை, சக மாணவன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை இரவு இரு மாணவர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாகவும், அதில், ஒரு மாணவர், மற்றொரு மாணவரைக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட மாணவரின் பெயர் கபில் ராகவேந்திரா என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் கேசிசி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் தங்கும் விடுதியில் இரு மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் போது கபில் ராகவேந்திராவை கிரிக்கெட் ஸ்டம்ப்பால் தாக்கியும், கத்திரிக்கோலால் குத்தியும் கொலை செய்ததாக மாணவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மாணவனைக் கைது செய்த காவல்துறையினர் சிறார் சீர்திருத்த மையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.