தமிழ்நாடு

பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு! இன்று முதல்..

29th Jul 2019 10:58 AM

ADVERTISEMENT

 

பழனி மலைக் கோயில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் 45 நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.

இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படி வழி, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. 

இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார், பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. 

ADVERTISEMENT

தற்போது பக்தர்கள் சீசன் குறைந்துள்ள நிலையில் காற்றடி காலம் என்பதால் ரோப்கார் இயக்கம் அடிக்கடி தடைபட்டு வருகிறது. இதனால், ரோப்காருக்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகளை தற்போது தொடங்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது. 

இதன்படி, மலைக்கோயில் ரோப்கார் 29-ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பக்தர்கள் விஞ்ச்சை பயன்படுத்திக் கொள்ளுமாறு இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT