தமிழ்நாடு

உலக புலிகள் தினம்: வண்டலூர் பூங்காவில் சிறப்பு விடியோ இன்று வெளியீடு

29th Jul 2019 12:58 AM

ADVERTISEMENT

 

உலக புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, வண்டலூர் பூங்காவில் புலிகள் குறித்த சிறப்பு விடியோ திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம், பறவைகள், ஊர்வனவைகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள வங்கப் புலிகள், வெள்ளைப் புலி என மொத்தம் 28 புலிகள் பராமரிக்கப்படுகின்றன. 

உலக புலிகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பூங்கா நிர்வாகிகள் கூறுகையில், "வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் 28 புலிகளில் அண்மையில் பிறந்த அரிய வகை 2 கரும்புலிக் குட்டிகளையும், ஒரு வெள்ளைப் புலிக் குட்டியையும் பொதுமக்களை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், இந்தக் குட்டிகளையும் இவற்றின் தாய் மற்றும் பூங்காவில் உள்ள மற்ற இரண்டு வங்கப் புலிகள் ஆகியவற்றை ஆன்லைனில் பார்க்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு விடியோ: உலக புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பூங்காவில் பராமரிக்கப்படும் 28 புலிகளின் பெயர்கள், அவற்றின் குணாதிசயம், உணவு முறை, வயது மற்றும் புலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய விடியோ  pride of zoological park என்ற தலைப்பில் திங்கள்கிழமை (ஜூலை 29) வெளியிடப்பட உள்ளது. யூ டியூப், முகநூல் (facebook) உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த விடியோவை பார்வையிடலாம். பூங்காவில் புலிகளைப் பார்வையிடும் இடத்தில் அவை குறித்த தகவல்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகளும் வைக்கப்படும் என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT