தமிழ்நாடு, புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரித் துறை ஆணையராக ராஜீவ் ஜெயின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 1984-ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் தொகுப்பைச் சேர்ந்தவர். தற்போது பணி உயர்வு பெற்றுள்ள இவர், தில்லி, அலகாபாத், மீரட், முஸாபர்நகர், லக்னெளவில் உள்ள வருமானவரித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்று சென்னை வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.