நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என மதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நடைபெறும்.
இதில், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் ராஜப்பா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.