சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.3,330-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.44.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,800 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,330
1 பவுன் தங்கம் 26,640
1 கிராம் வெள்ளி 44.80
1 கிலோ வெள்ளி 44,800