காவிரியிலிருந்து ஜூலை மாதத்துக்கான நீரை கர்நாடகம் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்ற நோக்கத்திலேயே கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் மழை பெய்தபோதும் தண்ணீர் தர மறுக்கிறது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.