தமிழ்நாடு

கோவை: சூலூர் கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர்; கண்டுபிடித்த வாடிக்கையாளர்

27th Jul 2019 03:52 PM | மதன்

ADVERTISEMENT


கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்ததை வாடிக்கையாளர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை வைத்து, ஏடிஎம் அட்டையின் தகவல்களைத் திருடும் கும்பல்களின் நடமாட்டம் தற்சமயம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கனரா வங்கியின் ஏடிஎம்மில், வாடிக்கையாளர் ஒருவர் இன்று பணம் எடுக்க வந்த போது, அதில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். வங்கி இன்று விடுமுறை என்பதால், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT