தமிழ்நாடு

குழந்தையின்மை சிகிச்சைக்கான சர்வதேச மாநாடு: இன்று தொடக்கம்

27th Jul 2019 02:53 AM

ADVERTISEMENT


குழந்தையின்மை சிகிச்சை மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு, சனிக்கிழமை (ஜூலை 27) தொடங்குகிறது. இரு நாள்கள் நடைபெறும் அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் நடைபெறும் இந்த மாநாடு குறித்து, மாநாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பாலியல் மருத்துவருமான டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
குழந்தையின்மை பிரச்னை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 40 சதவீதம் பேர் ஆண்மைக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். உலகிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். சர்க்கரை நோய் தாக்கம் உள்ளவர்களில் 60 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
 மாநாட்டின் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கென பிரத்யேக பாலியல் சிகிச்சைப் பிரிவினை ஆகாஷ் மருத்துவமனையில் தொடங்க உள்ளோம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT