தமிழ்நாடு

அப்துல் கலாம் கனவு மெய்ப்பட அனைருவம் அயராதுழைக்க உறுதியேற்போம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

27th Jul 2019 01:54 PM

ADVERTISEMENT

அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும்அயராதுழைக்க உறுதியேற்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் நினைவுதினத்தையொட்டி, இன்று ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில்,
தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மக்களின் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று "இந்தியா வல்லரசாக வேண்டும்" என்ற அவரது கனவுமெய்ப்பட அனைவரும் அயராதுழைக்க உறுதியேற்போம். 

கனவு காணுங்கள்; கனவுகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT