சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகராக வலம் வந்து, தன் நடிப்பால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சிவாஜி கணேசன். 
அவர் நடிப்பில் உருவான பல திரைப்படங்கள், அந்தக் காலத்திலேயே பெரும் வசூலை குவித்து சாதனை படைத்தன. 
திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி காலமானார்.
அவரது 18-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு, அவரது மகன்கள் பிரபு,  ராம்குமார்,  பேரன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
அப்போது நடிகர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியது:  
தமிழகத்தின் அழியாத பொக்கிஷமாகத் திகழ்கிறார் நடிகர் சிவாஜி. அவர் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தாத்தாவாக,  தந்தையாக, அண்ணனாக வாழ்கிறார் என்பது எங்களது நம்பிக்கை என்றார். 
இதைத் தொடர்ந்து சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சியின் கலைப் பிரிவுத் தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சிவாஜி மறைந்து 18 ஆண்டுகள் மட்டுமல்ல;  18 நூற்றாண்டுகள் ஆனாலும் அவர் வளர்த்த தமிழுக்காவும்,  கலைக்காகவும் தமிழகம் அவரை என்றென்றும் நினைவுகூரும்.  
மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கும் - காமராசர் சிலைக்கும் நடுவே சிவாஜியின் சிலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணி மண்டபத்தில் ஒலி, ஒளி திரை அமைப்பதாக தமிழக அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com