தமிழ்நாடு

சுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

22nd Jul 2019 01:00 AM

ADVERTISEMENT


னி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து காணப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை எதிரொலியாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை நீர் வரத்து  வரத்தொடங்கியது. ஆனால் மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் சனிக்கிழமை வரை அருவியில் கட்டுமானப் பணிகளை செய்ததால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பணிகள் முழுவதுமாக  முடிந்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதியளித்தனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்தும், குளிக்க அனுமதியும் வழங்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT