சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 

DIN | Published: 21st July 2019 06:17 PM

 

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு  திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக திரு டி.ராஜா தேர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

மாநிலங்களவை உறுப்பினரும், பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலமாகவும் விளங்கும் திரு டி.ராஜா அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முக்கியமான காலகட்டத்தில் திரு ராஜா அவர்கள் பொதுச்செயலாளராகியிருப்பது வரவேற்கத்தக்கது. மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் பாதுகாவலராக, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக - துணிச்சலான போராட்ட குணத்திற்குச் சொந்தமான திரு ராஜா அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று - இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாதுகாக்கும் பெரும் பணியில் அவர் மென்மேலும் பல வெற்றிகளை பெற்றிட வேண்டும் என்று  மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : CPI general secretary t.raja DMK stalin congratulatory message

More from the section

மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் அருண் ஜேட்லி: ராமதாஸ் இரங்கல்
மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார்: தமிழிசை இரங்கல்