25 ஆகஸ்ட் 2019

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

DIN | Published: 19th July 2019 12:59 PM


சென்னை: தமிழகத்தில் கோவை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவையின் சின்னக் கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் 9 செ.மீ. மழையும், அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்ப உள்ளது.

நேற்று வரை நாடு முழுவதும் பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மழை சராசரி அளவைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : tamilnadu rain rain update tamilnadu weather report

More from the section

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து 
உயிரோடு இருக்கும் நபருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்த அரசு மருத்துவமனை!
பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான்: எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு
 டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய எந்திரம்: பணியாளர்கள் பாதுகாப்புக்காக நடவடிக்கை