தமிழ்நாடு

க.அன்பழகனுக்கு திமுகவினர் நன்றி கூறாதது ஏன்?

19th Jul 2019 03:39 AM

ADVERTISEMENT

திமுகவினர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றாதது ஏன்? என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசும்போது, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு கூறியது:

எல்லோருக்கும் திமுக உறுப்பினர்கள் நன்றி கூறுகிறீர்கள். ஆனால், இனமானப் பேராசிரியர் என்று நீங்கள் அழைக்கும் க.அன்பழகனுக்கு நன்றி தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, திமுக தரப்பில் இருந்து எந்தவிதப் பதிலும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT