திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: முன்னாள் மாவட்ட ஆட்சியரிடம் குறுக்கு விசாரணை

DIN | Published: 16th July 2019 03:40 AM


சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சாலிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. 
கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால், ஏராளமான குளறுபடிகளைச் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
எனவே அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியரான பங்கஜ்குமார் பன்சால் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு
ஆசிய தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு திமுக ரூ. 5 லட்சம் நிதியுதவி 
ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு 
கீழடியில் மிக நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு
காஷ்மீர் விவகாரம்: தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்