சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான்! அமைச்சர் ஜெயக்குமார்

DIN | Published: 16th July 2019 01:39 PM

தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, நீட் தேர்வால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வு. ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என்றார். 

உடனே இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும். பழைய பழமொரிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : jayakumar minister assembly

More from the section

உதகையில் வாகன நிறுத்தத்துக்கு 1.5 ஏக்கர் நிலம்: உயர்நீதிமன்றத்தில் தனியார் கிளப் தகவல்
விஜயகாந்த் இன்று தொண்டர்களுடன் சந்திப்பு
போஷன் அபியான் திட்டம்: சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழகத்துக்கு விருதுகள்
முத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம்: வரும் 27-இல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி வழங்கும் விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு