தமிழ்நாடு

கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

16th Jul 2019 01:39 AM

ADVERTISEMENT


காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பேசியது: கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட்டதாகக் கூறியுள்ளார். அவர் திறந்துவிட்டு, விவசாயத்துக்காக  தமிழக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லையா? எனக் கேட்டார்.
அப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: தமிழகத்துக்கான நீரை கர்நாடக முதல்வர் குமாரசாமி திறந்துவிடவில்லை. கூடுதலாக நீர் வந்தால்தான் கர்நாடகம் திறந்துவிடுகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT