தமிழ்நாடு

எட்டு ஆண்டுகளில் ரூ.3,208 கோடி கோயில் சொத்துகள் மீட்பு: பேரவையில் தகவல்

16th Jul 2019 01:40 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 208 கோடி  திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 2 ஆயிரத்து 855.36 ஏக்கர் பரப்பளவுள்ள  நிலங்கள், 557 கிரவுண்டு பரப்பளவுள்ள மனைகளும், 250 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3 ஆயிரத்து 208.42 கோடியாகும்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு உள்பட்டு 300 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 6 ஆயிரத்து 159 ஆக்கிரமிப்பாளர்கள் வாடகைதாரர்களாக வரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணப்படுத்தும் பணி: தமிழகத்தில் திருக்கோயில்களில் 11 ஆயிரத்து 512 உலோக சிலை பாதுகாப்பு அறைகள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையால் 31 ஆயிரத்து 273 திருக்கோயில்களிலுள்ள 3 லட்சத்து 37 ஆயிரத்து 151 சிலைகள், உலோகத் திருமேனிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் எச்சரிக்கை மணி பொருத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT