திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

அத்திவரதரை தரிசித்தார் ராஜாத்தி அம்மாள்

DIN | Published: 16th July 2019 01:52 PM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை ராஜாத்தி அம்மாள் இன்று தரிசித்தார். 

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். திடீரென பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாள்களாக அதிகரித்ததால் கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

அதன்படி, கிழக்கு கோபுரம் அருகே பந்தல், மருத்துவ முகாம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து வரும் திரளான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி துணைவியரும் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை இன்று தரிசித்தார். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!
தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு
தனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்?
பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்