மத்திய அரசின் வருங்கால வைப்புநிதிக் கழக வழக்குரைஞராக மூ.பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் வரும் வருங்கால வைப்புநிதிக் கழகத்தின் வழக்குரைஞராக மூ.பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய தொழில் தீர்ப்பாயம், இதர கீழமை நீதிமன்றங்களில் வருங்கால வைப்புநிதிக் கழகம் தொடர்பான வழக்குகளில் வழக்குரைஞர் பழனிமுத்து ஆஜராகி வாதிடுவார். வழக்குரைஞர் பழனிமுத்து ஏற்கெனவே விமான நிலையங்கள் ஆணையம், சென்னை துறைமுகம், மத்திய நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியத் தர நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் வழக்குரைஞராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.