கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறும் பாஜக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து வருகிறது. இதற்கு எதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டம்? இந்த ஜனநாயக படுகொலையின் விளைவுகளை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பாஜகவின் 100 நாள் சாதனை என்பது ஓடாத திரைப்படத்தை 100 நாள் ஓட்டுவது போன்றது. ஒன்றுமே செய்யாத அரசு 100 நாள் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க மத்திய பாஜக அரசு ஒவ்வொரு வாரமும் புதுப்புது முயற்சியை எடுத்து வருகிறது. இந்த முயற்சி ஹிந்தி பேசும் மக்களுக்கு அசாத்தியமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார். பேட்டியின்போது, போளூர் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயக்குமார், காங்கிரஸ் நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ப.சிதம்பரம் சுவாமி தரிசனம் செய்தார்.