சென்னை: பெரம்பலூரில் எச்ஐவி பாதித்த மாணவருக்கு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எச்ஐவி பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த பள்ளி நிர்வாகம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தாமாக முன் வந்து புகார் பதிவு செய்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
இது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பெரம்பலூர் ஆட்சியர் ஆகியோர் பதில் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளது.