21 ஜூலை 2019

ரூ.28 கோடியில் விரிவான தேனீ வளர்ப்புத் திட்டம் வேளாண்மைத் துறை அமைச்சர்

DIN | Published: 13th July 2019 02:43 AM


நடப்பாண்டில் ரூ.28 கோடியில் விரிவான தேனீ வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள்: பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பச்சை பயிறு, துவரை, உளுந்து பயிர்களில் 11 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தொகுப்பு செயல் விளக்க திடல்கள் அமைக்கப்படும்.
 இந்தத் திட்டத்தின் கீழ் உயர் ரக விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை, டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீத கரைசல் இலைவழி தெளிப்பு, ஜிப்சம், பூசாஹைடிரோஜெல்,  களைக் கொல்லிகள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் முதலிய இடுபொருள்கள் ரூ.8.25 கோடி செலவில் விநியோகிக்கப்படும்.
மண் பரிசோதனை, பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள் மற்றும் உயிர் உர உற்பத்தி மையத்துக்கு நடப்பாண்டில் ரூ.5.12 கோடி செலவில் புதிதாக கட்டடங்கள் கட்டி புனரமைக்கப்படும்.
தேனீ வளர்ப்பதின் மூலம் உற்பத்தியை உயர்த்தவும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்ய நடப்பாண்டில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளித்து, தேனீ காலனிகளும், வளர்ப்புப் பெட்டிகளும், தேன் பிழியும் கருவிகளும் வழங்கப்பட்டு விரிவான தேனீ வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உயிரி கட்டுப்பாட்டு ஆய்வகங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்விளக்கத் திடல்கள் அமைக்கவும் நடப்பாண்டில் ரூ.6.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 7 வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறைகளும் இணைந்து மண்டல அளவில் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் விவசாயத் தொழில்நுட்பக் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்