21 ஜூலை 2019

முகிலன் வழக்கு: திருப்பதியில் சிபிசிஐடி விசாரணை

DIN | Published: 13th July 2019 02:41 AM


சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீட்கப்பட்டது குறித்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 ஈரோடு மாவட்டம்,  சென்னிமலையைச் சேர்ந்த  சூழலியல் செயல்பட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல்போனார். இதைத் தொடர்ந்து, அவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் கடந்த 6-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டார். இதன் பின்னர்,  கரூர் மாவட்டம்,  குளித்தலையைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் முகிலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், முகிலன் பிடிபட்டது குறித்து திருப்பதி ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் முகிலன் குறித்து யார் தகவல் அளித்தது, காவலர்கள் முதலில் பார்க்கும்போது முகிலன் என்ன செய்து கொண்டிருந்தார், முகிலனுடன் வேறு யாரும் இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்