21 ஜூலை 2019

தங்கம் விலை  ரூ.272 குறைவு

DIN | Published: 13th July 2019 02:17 AM


தங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை புதிய உச்சத்தை தொட்ட நிலையில்,  வெள்ளிக்கிழமை சற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.26,368-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த மாதத்தில் சில வாரங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது, அதன் பிறகு, விலை இறக்கத்தை சந்தித்தாலும், கடந்த 5-ஆம் தேதி தங்கம் விலை மீண்டும்  உச்சத்தை தொட்டது. தொடர்ந்து,  கடந்த வியாழக்கிழமை (ஜூலை 11) மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை  புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து, ரூ.3,330-க்கு விற்பனையானது. 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலை சற்று குறைந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.272 குறைந்து, ரூ.26,368-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.34 குறைந்து, ரூ.3,296-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.41.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300  குறைந்து ரூ.41,000 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,296
1 பவுன் தங்கம்    26,368
1 கிராம் வெள்ளி    41.00
1 கிலோ வெள்ளி      41,000
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,330
1 பவுன் தங்கம்       26,640
1 கிராம் வெள்ளி    41.30
1 கிலோ வெள்ளி    41,300

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்