21 ஜூலை 2019

காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும்:  ராமதாஸ்

DIN | Published: 13th July 2019 02:42 AM


கர்நாடக அணைகளில் நீர்ப்பெருக்கு அதிகரித்திருப்பதால், தமிழகத்துக்கான நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. என மொத்தம் 40.43 டி.எம்.சி தண்ணீரை வழங்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி ஆணையிட்டது. 
ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வந்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தவுடன், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு கூறியிருந்தது.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையால் கர்நாடகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயன் கிடைக்காத நிலையில், இப்போதுதான் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.  தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடத் தேவையான அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. 
எனவே, மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்தில் காவிரியில் தினமும் குறைந்தது ஒரு டிஎம்சி அளவுக்காவது தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்