21 ஜூலை 2019

ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய நளினி வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

DIN | Published: 13th July 2019 02:19 AM


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.   
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கைதியான நளினி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறேன். நான் எனது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. பல மாதங்கள் கடந்து பின்னரும் அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
எனவே, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ஆளுநருக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர முடியாது என வாதிட்டார். 
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது கடந்த 8 மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. எனவே அமைச்சரவையின் பரிந்துரையைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது' எனக் கூறி வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்