21 ஜூலை 2019

அந்நிய முதலீடுகளை ஈர்க்க தனி சிறப்புப் பிரிவுகள்: முதல்வர் அறிவிப்பு

DIN | Published: 13th July 2019 04:30 AM


தமிழகத்துக்கான அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனி சிறப்புப் பிரிவுகள் சென்னையிலும், தில்லியிலும் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 
சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ், அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்கள் உருவாக்கப்படுவார்கள். தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும், யாதும் ஊரே' என்ற தனி சிறப்புப் பிரிவும், இணையதளமும் உருவாக்கப்படும்.
தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் காணவும், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு தொடங்கப்படும். தொழில் வளர் தமிழகம்' என்ற பெயரில் புதிய அடையாள முத்திரையுடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.
தொழில் தோழன்: தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்த தனி இணையதளம் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து அதற்குத் தீர்வு பெற தொழில் தோழன்' என்ற பெயரில் இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ஏற்படுத்தப்படும்.
புதிதாக ஐ.டி.ஐ.க்கள்: தமிழகத்தில் தொழிற்பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம், நாகப்பட்டினம் மாவட்டம் செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும். அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும்.
தங்கும் விடுதிகள்: சிவகங்கை, நாமக்கல், காரைக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, சேலம், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, புள்ளம்பாடி, நாகலாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்