தமிழில் உடனுக்குடன்  உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்: தலைமை நீதிபதியிடம் திமுக மனு 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் திமுக அளித்துள்ளது
தமிழில் உடனுக்குடன்  உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்: தலைமை நீதிபதியிடம் திமுக மனு 

புது தில்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் திமுக அளித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமையகம் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார். 

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com