வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

திருச்செந்தூர் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

DIN | Published: 12th July 2019 01:03 AM
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகத்தையொட்டி மூலவர், சண்முகர் விமானங்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற அபிஷேகம்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு, வருஷாபிஷேகத்தையொட்டி, கோயில் நடை வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அக்கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி - தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.  மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். 
வருஷாபிஷேக விழாவில்,  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு 
குரூப்-4  தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: டி.என்.பி.எஸ்.சி
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றம்: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு 
கோவை குடிநீர் விநியோகத்துக்கு சூயஸ் ஏன்? குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நம்பிக்கையில்லையா?
முதியவர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்! தப்பிப்பது எப்படி?