சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

சேலம் திமுக எம்பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு  

DIN | Published: 12th July 2019 12:46 PM

கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மக்களவைத்தொகுதி திமுக எம்பி பார்த்திபன். சேலம் வேடங்கரடு மலைப்பகுதியில் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு இவர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து எம்.பி பார்த்திபன் மற்றும் அவரது சகோதர்கள் என 4 பேர் மீது அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த எம்பி பார்த்திபன் தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே தேவையின்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் அருண் ஜேட்லி: ராமதாஸ் இரங்கல்
மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார்: தமிழிசை இரங்கல்