தமிழ்நாடு

சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

12th Jul 2019 02:53 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக, 100  டிகிரி வரை வெப்பநிலை  இருக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
4 இடங்களில் சதம்: தமிழகத்தில்  வியாழக்கிழமை கரூர் பரமத்தியில் 102 டிகிரி, திருத்தணியில் 101 டிகிரி, வேலூர், சேலத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT