தமிழ்நாடு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்

12th Jul 2019 09:41 AM

ADVERTISEMENT

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித். இவரது தந்தை பாண்டுரங்கன்(63). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்நிலையில் பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மறைந்த பாண்டுரங்கனின் இறுதிச்சடங்குகள் சொந்த ஊரான கார்லப்பாக்கத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT