தமிழ்நாடு

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 9 விருதுகள்: முதல்வர் வாழ்த்து

12th Jul 2019 02:57 AM

ADVERTISEMENT


இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் கூட்டமைப்பின் விருதுகளைப் பெற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 62 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 
இந்த அமைப்பானது போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக 2018-19 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் 26- ஆம் தேதி  தில்லியில் நடைபெற்றது. 
இதில் தமிழகத்தின் 3 போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 9 விருதுகளை கழக மேலாண் இயக்குநர்கள் பெற்றுக் கொண்டனர். 
இந்த விருதுகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வில் போக்குவரத்துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT