வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.