தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக இன்று மனு தாக்கல்

6th Jul 2019 01:42 AM

ADVERTISEMENT


மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 3 பேர் சனிக்கிழமை (ஜூலை 6) மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுகவின் சார்பில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்குரைஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதிமுவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓரிடத்தை திமுக விட்டுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 3 பேரும் சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்காக வைகோ சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அறிவாலயத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினைச் சந்திக்கிறார். அதன் பிறகு, திமுக உறுப்பினர்கள் 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டு, சட்டப்பேரவைச் செயலகத்துக்கு 11 மணியளவில் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT