தமிழ்நாடு

அம்மாவும்...அண்ணனும்...!முதல்வருக்கு அமைச்சர் தங்கமணி புகழாரம்

6th Jul 2019 02:47 AM

ADVERTISEMENT


முதல்வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என நினைத்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது அவரது செயல்திறனை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி புகழாரம் சூட்டினார்.
உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது, மின்கோபுரம் அருகே சென்று ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி விளக்கினை எரிய விட்டதாக செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே இருந்த மின்கோபுரத்தைத் தான் அவர் காண்பித்தார். அப்போது அம்மா (ஜெயலலிதா) இருந்தார். கணேசமூர்த்தி அமைதியாக இருந்து விட்டார்.  அம்மாவுக்குப் பிறகு அண்ணன் (முதல்வர் பழனிசாமி) வந்து திட்டங்களைக் கொண்டு வர, அம்மா என்னென்ன செய்தாரோ அவற்றைச் செய்து வருகிறார்.
ஏதோ, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அமைதியாக உட்கார்ந்திருந்தார் என நினைத்துக் கொண்டிருந்தீர்கள். அவருடைய உண்மையான செயல்திறனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT