தமிழ்நாடு

மீண்டும் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: பவுனுக்கு ரூ.464 உயர்வு

4th Jul 2019 04:33 AM

ADVERTISEMENT

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக கணிசமாகக் குறைந்து வந்தநிலையில், புதன்கிழமை மீண்டும் உயர்ந்து, பவுன்  ரூ.26 ஆயிரத்தைத் தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.464 உயர்ந்து, ரூ.26,192-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால்  கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவியது.
தொடர்ந்து, கடந்த சில நாள்களாக விலை கணிசமாக குறைந்து வந்தநிலையில், புதன்கிழமை மீண்டும் உயர்ந்து, பவுன் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.464  உயர்ந்து, ரூ.26,192-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.58 உயர்ந்து, ரூ.3,274-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.40.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.40,700 ஆகவும் இருந்தது. 
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,274
1 பவுன் தங்கம்    26,192
1 கிராம் வெள்ளி     40.70
1 கிலோ வெள்ளி    40,700
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,216
1 பவுன் தங்கம்    25,728
1 கிராம் வெள்ளி    40.40
1 கிலோ வெள்ளி    40,400
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT