தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பெயர்கள் இன்று அறிவிப்பு

4th Jul 2019 02:25 AM

ADVERTISEMENT


மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் வியாழக்கிழமை (ஜூலை 4) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 பாமகவுக்கு ஓர் இடம் அளிக்கப்படும் என ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு இடங்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 
பேரவையில் தற்போதுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கைப்படி, ஆறு இடங்களில் தலா மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கிடைக்கும். 
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய திங்கள்கிழமை அன்று, எம்எல்ஏக்கள் யாருடைய முன்மொழிதலும் இல்லாமல் இரண்டு சுயேச்சைகள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக எப்போது: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
வியாழக்கிழமை அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 8-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் வேட்பாளர்களின் பெயர்களை ஓரிரு நாள்களில் அதிமுக தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT